12 வயது சிறுவனின் செயல்/ பலர் பலி

ஆப்கானிஸ்தான் – காபுலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர் 12 அல்லது 13 வயதுடைய சிறுவன் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.

சட்டத்தில் இருந்து தப்ப முயற்சிக்கவில்லை/ கார்லஸ் பியுஜ்மன்ட்  

தாம் ஏதிலி அந்தஸ்த்து கோருவதற்காக பெல்ஜியம் செல்லவில்லை என்று, கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இருந்து பிரிந்து கட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தற்போது அந்த பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஸ்பெயின் கைக்கொண்டுள்ளது. அத்துடன் தனிநாட்டுக்கான முயற்சிகளை […]