IPL / ஏலத்தில் 1122 வீரர்கள்/ இலங்கையர்கள்?

இந்த ஆண்டு IPL தொடருக்கான வீரர் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து 1122 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்கும் காலம் நேற்று(12) உடன் நிறைவடைந்தநிலையில், விண்ணப்பித்த வீரர்களின் பட்டியல்கள், 8 IPL அணிகளின் உரிமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

778 இந்தியர்களைத் தவிர, இந்தமுறை அவுஸ்திரேலியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையான வீரர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்(58)

இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தீவ்ஸ், நிரோசன் டிக்வெல்ல, திஸர பெரேரா உள்ளிட்ட 39 பேர் தொடரில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் IPL போட்டிகளுக்கான வீரர் ஏலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IPL

Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *