Facebook/ பாவனையாளர்களை இரகசியமாக கண்காணிக்கவுள்ள பேஸ்புக்

பேஸ்புக் பாவனையாளர்களை வெப்கெம் மற்றும் திறன்பேசி கெமராக்கள் ஊடாக இரகசியமாக கண்காணிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு இதற்கான காப்புரிமைக்கு பேஸ்புக் நிறுவனம் விண்ணப்பித்துள்ள போதும், தற்போதே இந்த தகவல் அறியப்பட்டுள்ளது.

இதன்படி பேஸ்புக் பாவனையாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் போது, கெமராவின் ஊடாக அவர்களது உணர்வு வெளிப்பாடுகளை பேஸ்புக் தொழில்நுட்பம் கண்காணிக்கும்.

இதன் ஊடாக பேஸ்புக் பாவனையாளர்களை நீண்டநேரம் பேஸ்புக்கில் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு நண்பரின் படத்தை பார்த்து பாவனையாளர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாராக இருந்தால், அதனை கண்காணிக்கும் இரகசிய தொழில்நுட்பம், குறித்த நண்பரின் படங்களை அதிக அளவில் குறித்த பாவனையாளருக்கு காண்பித்து அவரை நீண்ட நேரம் பேஸ்புக்கை பாவிக்கத் தூண்டும்.

 

 

cbinsights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *