COPE குழு மீண்டும் விசாரணை?

COPE குழு எனப்படும் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் விசாரணைகளை நடத்தவுள்ளது.

இதற்காக மத்திய வங்கியினதும், நிதி அமைச்சினதும் அதிகாரிகளை விரைவில் அழைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணை முறி மோசடி குறித்த தமது விசாரணை அறிக்கையை கோப் குழு கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்திருந்தது.

இந்த அறிக்கையின் பரிந்துரை அமுலாக்கம் குறித்த பின்னூட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளனர்.

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நிறைவடைந்தப் பின்னர், இந்த நடவடிக்கையை கோப் குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *