Sir Tim Berners-Lee/ தகவல் பாதுகாப்புக்கு திட்டம்

இணையத்தைக் கண்டுபிடித்தவர் சேர் திம் பேர்னர்ஸ் லீ தற்போது இவர் இணையத்தில் உலாவும் போலிச் செய்திகளையும், தகவல் துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐந்து வருட மூலோபாய திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்துள்ளார். இணைய வழியில் அனைவரின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவரது […]

Park Geun-hye/சிறப்புரிமை இழந்தார் 

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் குயின் ஹை, ஜனாதிபதிக்கான சிறப்புரிமையை இழந்துள்ளார். பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணையை, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன்படி அவருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன் மே மாதத்துக்குள் தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.  […]

சுவிசில் தாக்குதல் – இருவர் பலி

சுவிட்சர்லாந்து – பாசெல் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் பலியாகினர். கைக்குழந்தை ஒன்று படுகாயம். இரண்டு துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி தப்பியுள்ளனர். 

இளஞ்சிவப்பான ஏரி

ஏரிகள் எவையும் இளஞ்சிவப்பில் இருப்பதில்லை. ஆனால் அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன், விக்டோரியா பகுதியில் உள்ள வெஸ்ட் கேட் ஏரி இளஞ்சிவப்பு நிறத்திற்கு திடீரென மாறியது.  வெப்ப காலநிலை, அதிக சூரிய ஒளி, சிறிய அளவான மழை மற்றும் அதியுச்ச உவர்த்தன்மை என்பனவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதன் […]

BREXIT/சட்ட மூலம் தோல்வி

ப்ரெக்ஸிட் சட்ட மூலம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் தோற்கடிப்பு ஆதரவு – 358 எதிர்ப்பு – 256 கடந்த வருடம் ஜுனில் இடம்பெற்ற பொதுசனவாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வாக்களிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அதற்கான சட்ட மூலம் பிரபுக்கள் சபையில் முன்வைக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய […]

பனிச்சரிவு/மேலும் அய்வரை காணவில்லை

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரில் பனிச்சரிவு அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 இராணுவத்தினர் […]

ட்ரம்ப்/அகதிகள்/கிறிஸ்த்தவர்களுக்கு முன்னுரிமை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாம் அறிவித்ததைப் போலவே அகதிகளை ஏற்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளார். 120 நாட்களுக்கான இந்த உத்தரவில் அவர் இன்று கைச்சாத்திட்டுள்ளார். இதன்படி பல முஸ்லிம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் […]

ISIS/இரசாயனத் தாக்குதல்?

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இரசாயனத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஈராக்கிய விசேட படையினர் இதனை அறிவித்துள்ளனர். வடக்கு மோசுல் நகரில் இந்த தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எஞ்சியுள்ள ஒரேஒரு பகுதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப் / சந்திப்புகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார். வெள்ளைமாளிகை இதனை அறிவித்துள்ளது. ரஷ்யா, ஜேர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். இன்று (27) அவர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்தித்திருந்தார்.

சோமாலியா – தாக்குதல்

சோமாலியாவில் தலைநகர் மகடிசுவில் ஆயுததாரிகள் தாக்குதல் குறைந்த பட்சம் 10 பேர் பலி – 50க்கும் அதிகமானவர்கள் காயம் நான்கு தாக்குதல்தாரிகள் சுட்டுக் கொலை. ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்பு