சம்பந்தன்/சீனாவின் தலையீடு

இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் சீனா தலையிடுவதில்லை. ஆனால் இந்தியா பல விடயங்களில் அக்கறை காட்டுகிறது. எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.

வறட்சி/16 மாவட்டங்களில் பாதிப்பு

இலங்கையின் 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு. முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் போன்றனவும் அடக்கம். 2 லட்சத்து 28 ஆயிரத்து 906 குடும்பங்களைச் சேர்ந்த 8 லட்சம் 99 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு. நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி உத்தரவு நிதி அமைச்சு நிதி ஒதுக்கீடு.

ஈழத்தமிழர்/தொழிற்கட்சி முக்கிய தீர்மானம்

இலங்கை மற்றும் ஈழத் தமிழர் குறித்த முக்கியத் தீர்மானத்தை பிரித்தானியாவின் தொழிற்கட்சி மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி இது தொடர்பில் தொழிற்கட்சி நாடாளுமன்றத்தில் வைத்து ஆராயவிருப்பதாக கூறப்படுகிறது. இதன்போது ஈழத் தமிழர்களுக்கு வழங்கக்கூடிய வலுவானதும், சாத்தியமானதுமான ஆதரவு குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. ஏற்கனவே இலங்கையின் பொறிமுறை அமுலாக்கத்துக்கு கால அவகாசம் […]

ஆட்கடத்தல்/ 6 பேர் கைது

இலங்கையில் இருந்து ஆட்கடத்தல்களை மேற்கொண்ட ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியுசிலாந்துக்கு படகு மூலம் பயணிக்கவிருந்த 18 பேர் 24ம் திகதி கைதாகினர். அவர்களில் குறித்த ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சம்பந்தன்/சந்திப்பு திருப்தி

அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பு திருப்தியாக இடம்பெற்றதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது குறித்த அவர் வெளியிடும் கருத்து ஒலி வடிவில் குரல் – சம்பந்தன்  

கேப்பாபுலவு/தீர்வின்றி தொடரும் போராட்டம்.

விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி இந்த போராட்டம் 25வது தினமாக தொடர்கிறது.  இதுவரையில் இந்த மக்களின் பிரச்சினை குறித்து வினைத்திறனான பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை. காணிகளை ஆதாரத்துடன் அடையாளப்படுத்தினால் விடுவிப்பதாக படையினர் கூறுகின்றனர். இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கை ஒன்றை படையினருக்கு […]

த.தே.கூட்டமைப்பு + US தூதுக்குழு சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் அத்துல் கெசாப் உள்ளிட்ட குழுவினரும், கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தினர் சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். 

பரவி பாஞ்சான் மக்களுக்கு வெற்றி

பரவிபாஞ்சானில் கடந்த திங்கட் கிழமை முதல் நிலவிடுவிப்பை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்று வந்தது. அவர்களின் காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினரும், அதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இதன்படி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டுக்குப் பின்னர் மக்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பார்வையிட்டு, சுத்திகரிப்பை மேற்கொண்டனர்.  

போர்க்குற்றங்கள்/பிரித்தானிய பிரதமருக்கு மனு

மனித உரிமைகள் மாநாட்டில் பிரித்தானியா இலங்கை சார்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில், அந்த நாட்டின் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவின் முக்கிய விடயங்கள்…. இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது. உள்ளக பொறிமுறைகளை அமுலாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு தாமதிக்கிறது. பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. மேலும் […]

ஊழல் அதிகம்/மகிந்த

பத்தரமுல்லை – கொஸ்வத்தை விகாரையில் வைத்து மகிந்த கூறிய விடயங்கள்… ஊழல் பேர்வழி என்று தம்மீது அரசாங்கம் விரல்காட்டியது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் பாரிய ஊழல்களை புரிகிறது. முறிவிநியோக மோசடி உள்ளிட்ட பல மோசடிகளை அரசாங்கம் செய்கிறது. பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுகிறது.

தமிழ் அரசியல்வாதிகள் அதிருப்தி

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அரசாங்கத்தை உருவாக்க தமிழ் மக்களே அதிகம் உதவினர். ஆனால் தமிழர்களுக்காக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் இருந்து தங்கள் விடயத்தில் அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளனர்.

யுத்தக்குற்றங்கள்/வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு

போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் இழுத்தடிப்பது குறித்து வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்வைக்கும் கருத்துக்கள். அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்காதிருந்தால், வடமாகாண சபை அதனை மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறித்து ஆராயும் என்று கூறி இருந்தேன். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறியவே இந்த கருத்தை வெளியிட்டேன். இதனைக் கேட்டு அரசாங்கம் பதற்றம் அடைந்திருக்கிறது. […]

காணிசுவீகரிப்பு/முற்றுகை போராட்டம்

யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நடத்தப்படவுள்ளது. படையினரின் தேவைக்காக மேலும் பல காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்காக 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை அறிவித்தார். குரல் பதிவு

வடக்கு முதல்வர்/அதிகபாதுகாப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வழமையை விட 30க்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய காவற்துறையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இதற்கான காரணம் விளக்கப்படவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொல்ல முயற்சிக்கப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் […]

கருணாவுக்கு விருது?

கருணா அம்மானுக்கு அரசாங்கம் வீர விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி அஜித் ப்ரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார். கருணாவை மஹிந்தவும் கோட்டாபயவுமே சரியாக பயன்படுத்தினர். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு கருணா முக்கிய பங்காளி. எனவே சரத் ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் மார்சல் […]