காற்பந்து கழகம் மீது குண்டுத் தாக்குதல்

ஜேர்மனியின் பொருஷியா டோர்ட்மண்ட் காற்பந்து கழகத்தின் பேருந்து மீது 3 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உள்ளுர் சாம்பியன்ஸிப் லீக் தொடரின் காலிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக பயணித்த வீரர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ள போதும், ஏனையவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை. சம்பவம் […]

கொல்கட்டா நைட்ரைடர்ஸுக்கு இழப்பு?

கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் லின் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு தோற்பட்டையில் காயம் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுள் அவருக்கு அதே இடத்தில் ஏற்படும் 3வது காயம் இதுவாகும். இதனால் அவர் இந்தமுறை ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து விளையாடுவது […]

இலங்கை-பங்களாதேஸ் T20/சுவாரஷ்யமான தகவல்கள்

இன்றைய(4) போட்டியில் விளையாடும் அணிகளில் இரண்டு பேர் மாத்திரமே (தமிம் இக்பால்-1202, சகிப் அல் ஹசன்-1159) 20க்கு20ல் 1000 ஓட்டங்களைக் கடந்தவர்கள். பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை விளையாடிய 11 T20 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. பங்களாதேஸ் ஒரு T20 போட்டியிலேனும் வென்றிராத 5 நாடுகளில் இலங்கையும் ஒன்று. […]

உபுல் தரங்க இலங்கை அணிக்கு தலைவர்

20க்கு20 போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்கவுள்ளார்.  சிறிலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.  பங்களாதேஸுக்கு எதிரான 20க்கு20 போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகிறது. அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் இந்த தொடரிலும் பங்கேற்காத நிலையில் தரங்க தலைவராக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் செஹான் ஜெயசூரிய மற்றும் திஸ்ஸர […]

விராட் கோலிக்கு பத்மசிறி விருது

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலிக்கு பத்மசிறி விருது வழங்கப்பட்டது. ராஸ்ட்ரபதியில் விசேட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் இந்த விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது உயரிய விருதாகும். இது குறித்து தாம் பூரிப்படைவதாக கோலி கூறியுள்ளார்.

Cricket/மொஹமட் இர்பானுக்கு தடை

பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர். குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவர் கிரிக்கட் சபையில் முறையிட தவறியுள்ளார். இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்த தடையை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை […]

அதிகம் உழைக்கும் காற்பந்தாட்ட வீரர்கள்

2016-17ல் அதிகம் உழைக்கும் சர்வதேச காற்பந்து வீரர்களின் பட்டியலை ‘ஃப்ரான்ஸ் ஃபுட்போல்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. க்றிஸ்ரியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட் – போர்த்துகல்) – 87.5 மில்லியன் யூரோ லியோனெல் மெசி (ஆர்ஜெந்தீனா – பார்சிலோனா) 76.5 மில்லியன்  நெய்மர் (பார்சிலோனா – ப்ரேசில்) – 55.5 மில்லியன் […]

கிரிக்கட்/இலங்கை-பங்களாதேஸ்/முக்கிய புள்ளிகள்

இன்றைய இலங்கை பங்களாதேஸ் 1ம் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நிரோசன் திக்வெல்ல விளையாட மாட்டார்  அவருக்கு பதிலாக தில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார்.  இலங்கை அணி தம்புள்ளை மைதானத்தில் இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடரை பங்களாதேஸ் கைப்பற்றும் பட்சத்தில், ஒருநாள் தரவரிசையில் ஆறாம் […]

இலங்கை பங்களாதேஸ் கிரிக்கட்/சூதாட்டம்?

இலங்கை பங்களாதேஸ் ஒருநாள் கிரிக்கட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர் கைதாகியுள்ளனர். குஜராத் – வடோடரா – கோத்ரா பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 18 கைப்பேசிகள், 2 மடிகணினிகள் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. […]

இலங்கை கிரிக்கட் வீரரிடம் விசாரணை

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளது.  அமெரிக்காவில் இருந்து அவருக்கு ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒன்றின் நிமித்தம் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.  இதனை சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர் குழுவின் உறுப்பினர் லக்‌ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி இருக்கிறார்.  பங்களாதேஷ் […]

ஆசியன் க்ராண்ட்ப்ரிக்சில் இலங்கை வீரர்கள்

சீனாவில் அடுத்த மாதம் ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கையில் இருந்து 12 மெய்வல்லுனர்கள் (7 ஆண், 5 பெண்) கலந்து கொள்கின்றனர்.  சீனாவின் ஜியாக்சிங்கில் 24ம் திகதியும், ஜின்ஹுவாவில் 27ம் திகதியும், தாய்பேயில் 30ம் திகதியும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன. ஜுன் மாதம் நடைபெறவுள்ள […]

இலங்கை கிரிக்கட் அணியை தாக்கியவர் பலி(Video)

இலங்கை கிரிக்கட் அணி மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானிய தீவிரவாதி, அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தான் – பக்டிகா மாகாணத்தில் உள்ள பார்மெல் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் பலியாகினர். பாகிஸ்தானின் லாஹுர் நகரில் வைத்து இலங்கை […]

இலங்கை- பங்களாதேஸ் டெஸ்ட்/ முக்கிய புள்ளிகள்

பங்களாதேஸின் 100வது டெஸ்ட் இதுவாகும் ரங்கன ஹேரத்- முதற்தர போட்டிகளில் 1000 விக்கட்டுகளை பெற 3 விக்கட்டுகள் தேவை பங்களாதேஸ் சரவணமுத்து மைதானத்தில் இறுதியாக விளையாடிய 3 போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.  இந்த ஆண்டு 441 ஓட்டங்களைப் பெற்றுள்ள மஸ்பிகர் ரஹீம், சிறந்த துடுப்பாட்ட பெறுமதியை பெற […]

நாடு திரும்பியது இலங்கை அணி

ஒஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது. 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடர் சவால் மிக்கதாக இருந்ததாக இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.   Photo – espncricinfo