சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா

சூரியனுக்கான புதிய விண்கலத்தை அனுப்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. த  பார்க்கர் என்ற இந்த விண்கலம் அடுத்த பருவக்காலத்தில் சூரியனை நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளது. இது மணிக்கு 430,000 மைல்கள் என்ற வேகத்தில் பயணித்து, சூரியனின் மேற் தள மண்டலத்தை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்கலமானது, அதியுச்ச வெப்பத்தை […]

110 மில்லியன் வருடங்களாகியும் சேதமடையாத டைனோசர் உடல்

உயிருடன் இருப்பதைப் போன்ற டைனோசர் ஒன்றின் உடல் கனடாவில் உள்ள மணல் சுரங்கம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நொடோசர்(Nodosour) என்று அறியப்படும் இந்த டைனோசர் 18 அடி நீளமானது. 110 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கருதப்படும் இதன் உடல் நன்கு பதப்பட்டு, அதன் தோல் மற்றும் தசை […]

இணைய முடக்கல்/மீண்டும் லாசரஸ் குழுவா?

உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட வன்ன க்ரை(wanna cry) கப்பம் பெறும் மென்பொருள் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூகுல் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் நீல் மெஹ்தா இதனைத் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் மற்றும் 2016ம் ஆண்டு பங்களாதேஸ் வங்கி ஆகியவற்றின் மீது லாசரஸ் குழு (Lazaras […]

WhatsAppல் வரவுள்ள Unsend வசதி

வட்சப் தகவல் பரப்பு செயலியில் புதுப்புது நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி அனுப்பப்பட்டத் தகவலை 5 நிமிடங்களுக்குள் மீளப்பெறும் (Unsend) வசதி விரைவில் அமுலாக்கப்படவுள்ளது.  ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பிய தகவலை 5 நிமிடங்களுக்குள் மீளப்பெற வாய்ப்பளிக்கப்படவுள்ளது.  பெரும்பாலும் இது ஐஃபோன் மற்றும் ஐபேட்களுக்கான iOSபுதுப்பிக்கப்பட்டதன் பின்னரே அறிமுகப்படுத்தப்படும் என்று […]

வேற்றுக்கிரக உயிரினங்கள் கண்டுபிடிப்பு?

சனிக்கிரகத்தின் துணைக்கோளான என்சிலாடஸில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏதுநிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாசா இதனை அறிவித்துள்ளது. நாசாவின் காசினி விண்ணோடம் மேற்கொண்ட ஆய்வில், அங்கு ஹைட்ரஜன் வாயு இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாயுவானது அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான இரசாயன சக்தியாக அமைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் அதீத நம்பிக்கை […]

இலங்கையில் மனச் சோர்வு அதிகரிப்பு

இலங்கை வாழ் மக்களிடையே மனச் சோர்வு அதிகரித்துள்ளது.  சுமார் எட்டு லட்சம் இலங்கையர்கள் மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2004ம் ஆண்டு 36ஆக இருந்த மனவள ஆலோசகர்கள் 2016ம் ஆண்டாகும் போது 77ஆகவும், மனநலம் தொடர்பான வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கையும் 34ல் இருந்து 205ஆக அதிகரித்துள்ளனர். ஆனால் 15 ஆண்டுகளாக […]

சூரியன் உச்சம்/வெப்பம் அதிகரிப்பு/தோல் நோய் அபாயம்

இலங்கையில் இன்று(05) முதல் 15ம் திகதி வரையில் சூரியன் உச்சம் பெறுகிறது.  இதனால் பல இடங்களில் 35 பாகை செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நாளாந்தம் குறிப்பிட்ட பகுதிகளில் சூரியன் மிக அருகில் தோன்றும் போது வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.  வெப்பமான காலநிலையின் போது பொதுமக்கள் […]

இலங்கைக் கணினிகளில் கப்பம் பெறும் வைரஸ்

இலங்கையில் கணினிகளில் ரென்சம் வெயார் எனப்படும் கப்பம் பெறும் வைரஸ்கள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களாக இது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. இலங்கை கணினி முறைப்பாட்டு பதிலளிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாகவே இந்த வைரஸ் பரவுவதுடன், கணினின் முக்கிய ஆவணங்களை அழிக்கவும் செய்கின்றன. எனவே […]

காசநோயாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் 15000க்கும் அதிகமான காச நோயாளிகள் உள்ளனர். வைத்திய நிபுணர் நந்திக ஹரிச்சந்திர இதனைத் தெரிவித்துள்ளார். வருடாந்தம் 10000 காசநோயாளர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைகின்றனர். ஆனால் 5000 காசநோயாளர்கள் வருடாந்தம் சிகிச்சைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

டெங்கு/ 33 மரணங்கள்

டெங்கினால் கடந்த 73 நாட்களில் 33 பேர் மரணித்துள்ளனர். 21,541 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிண்ணியாவில் மாத்திரம் 3 வாரங்களில் 13 பேர் மரணித்துள்ளனர். டெங்கு கொடூரமாக பரவி வருகிறது. சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருத்தல் கட்டாயம்.

டெங்கு – 66 பாடசாலைகள் மூடல்

டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கிண்ணியா கல்வி வலைய திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கடந்த 3 வாரங்களில் 12 பேர் டெங்கினால் கிண்ணியா பகுதியில் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Sir Tim Berners-Lee/ தகவல் பாதுகாப்புக்கு திட்டம்

இணையத்தைக் கண்டுபிடித்தவர் சேர் திம் பேர்னர்ஸ் லீ தற்போது இவர் இணையத்தில் உலாவும் போலிச் செய்திகளையும், தகவல் துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐந்து வருட மூலோபாய திட்டம் ஒன்றை அவர் முன்மொழிந்துள்ளார். இணைய வழியில் அனைவரின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவரது […]

டெங்கு யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு

கொழும்புக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் அதிக டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வாரங்களில் இலங்கையில் டெங்கு பரவல் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, முதல் மூன்று மாதங்களில் 46 சதவீத அதிகரித்த டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சூழலை நுளம்பு […]

க்ரோட்டன் /உண்பது ஆபத்தானது

அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்கோட்டன் செடிகளை உண்ணுவது ஆபத்தானது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன ஜெயசுமன இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார். வயிற்றோட்டத்தைக் குணப்படுத்த க்ரோட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் காணப்படும் ஒருவகையான எண்ணெய் உலர வைத்தப் பின்னரும் விசத்தன்மையுடனேயே இருக்கும். […]