முதலாவது செய்மதியை அனுப்பவுள்ள இலங்கை

செய்மதி விண்ணாய்வு தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இலங்கையானது, தமது முதலாவது நெனோ செய்மதியை 2020ம் ஆண்டு செலுத்தவுள்ளது.

வெறும் கண்ணில் தெரிந்த வியாழன், வெள்ளிக் கிரகங்கள்-படங்கள்

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிரகங்களும் பூமிக்கு மிக அருகில் வெறுங்கண்களால் பார்க்க கூடிய அளவுக்கு தெளிவாக காட்சியளித்தன. சூரியன் உதிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக, இரண்டு பிரகாசமான பந்துகள் போல இவை காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் சில பாகங்களுடன், இந்தியா […]

Whatsappபால் நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?

வட்ஸாப் (Whatsapp) என்ற சமுக வலைத்தளத்தைப் போன்றே போலியான செயலி(App) ஒன்று உருவாக்கப்பட்டு, பல மில்லியன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அண்ட்ரொயிட்(Android) திறன்பேசிகளில் செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுகின்ற கூகுள் ப்லே(Googleplay) ஊடாகவே இந்த போலியான செயலியும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வட்ஸாப் (Whatsapp) என்ற பெயரிலேயே கண்ணுக்குத் தெரியாத ஒரு […]

போலிச் செய்திகளை தடுக்கத் தவிக்கும் Facebook

Facebook தளத்தில் அதிக அளவான போலிச் செய்திகள் நாளாந்தம் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வாறான செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு Facebook பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், முழுமையாக வெற்றியளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Facebook நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வாறான செய்திகளை அறிந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு […]

செவ்வாய்கிரகத்தில் சுடுநீரா? அங்கு மணற்குன்றுகள் எதனால் உருவாகின? விளக்கம் இதோ

செவ்வாய்கிரகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அங்குள்ள மணற்குன்றுகளாகும். இவை எவ்வாறு உருவாகின என்பதுதொடர்பில், செவ்வாய்கிரகத்தை ஒத்த சூழ்நிலைகள் பூமியில் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்கிரகத்தில் சிரிய அளவான நீர் அதிதீவிர கொதிநிலையை அடைவதனால், மணலை பொங்கச் செய்து, இவ்வாறான மணற்குன்றுகளை உருவாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பூமியில் […]

சுனாமியால் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த மனிதன்

பப்புவா நியுகினியில் 6000 வருடங்களுக்கு முந்திய ஹோமோ இரெக்டர்ஸ் மனித இனத்திற்கு உரிய மண்டை ஓடு கடந்த 1929ம் ஆண்டு மீட்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக குறித்த மண்டை ஓடும்,  அது மீட்கப்பட்ட அய்தாபே நகரும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் அங்கு 6000 வருடங்களுக்கு முன்னர் சுனாமி ஏற்பட்டமையும், […]

நாசா/ செவ்வாய்கிரகம் செல்வதற்கு அண்டவெளி கதிர்வீச்சு தடையல்ல

பூமியில் காணப்படும் கதிர்வீச்சுக்களை விட, அண்டவெளியில் உள்ள கதிர்வீச்சுகள் மனித உடலுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக்கூடியவை. ஆனால் செவ்வாய்கிரகத்துக்கு மனிதர்கள் செல்வதற்கு இந்த கதிர்வீச்சி இனியும் தடையாக இருக்கப்போவதில்லை என்று நாசாவின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கதிர்வீச்சு உள்ளிட்ட இதர அண்டவெளி பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது […]

ஐந்து இரட்டைக் கருந்துளைகள் கண்டுபிடிப்பு

விண்ணாய்வு விஞ்ஞானிகளால் ஐந்து இரட்டைக் கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கருந்துளையும் சூரியனைக் காட்டிலும் பல மில்லியன் மடங்கு பெரியனவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் கருந்துளைகள் ஆனவை, இரண்டு நட்சத்திர மண்டலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்னர் ஒன்றிணைந்தமையால் உருவாகியுள்ளன. இதன்காரணமாக இரண்டு கருந்துளைகள் அருகருகே இருப்பதாக […]

சீகா வைரஸ் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை

சீகா வைரஷ் சர்வதேச அளவில் மனிதர்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் வைரஸாக இப்போதும் நிலவுகிறது. குழந்தைகளின் மூளையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற இந்த வைரஸைக் கொண்டு, வயதுவந்தவர்களின் மூளைப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை அறிவித்துள்ளனது. இந்த சிகிச்சை முறைமை விலங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட […]

2000 வருடங்கள் பழைமையான கல்லறைகள் மீட்பு

சுமார் 2000 வருடங்கள் பழமையான கல்லறைகளை எகிப்தின் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் மீட்டுள்ளனர். இவ்வாறு 3 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு எகிப்த்தின் அல்-காமின் அல்-சஹ்ராவி பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்லறைகள் க்ரேகோ-ரோமன் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புதிய நிலவு கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியில் நெப்டியூன் கிரகத்துக்கு ஒப்பான அளவில் புதிய நிலவு ஒன்றை நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இது வியாழன் கிரகத்தை ஒத்த அளவான மற்றுமொரு கிரகத்தை சுற்றி வலம் வரும் இந்த துணைக்கோள், நாசாவின் கெப்லர் தொலைநோக்கி ஊடாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை ஹபல் தொலைநோக்கி ஊடாக எதிர்வரும் […]

ரென்சம்வேருக்கு 25 மில்லியன் டொலர் கப்பம் செலுத்தப்பட்டுள்ளது

ரென்சம்வேருக்கு 25 மில்லியன் டொலர் கப்பம் செலுத்தப்பட்டுள்ளது ரென்சம்வேர் எனப்படும் கப்பம்பெறும் மென்பொருட்களுக்கு, கணினி பாவனையார்கள் பலர் கடந்த 2 வருடங்களில் 25மில்லியன் டொலர் கப்பமாக வழங்கி இருப்பதாக தெரியந்துள்ளது. கூகுல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த வொன்னக்ரை […]

11 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞை

11 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரம் ஒன்றில் இருந்து மர்மமான சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கரிபியன்தீவுக் கூட்டத்தின் பியோடோ ரிகோ பல்கலைக்கழகத்தின் விண்ணாய்வாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். பியோடோ ரிகோ தீவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விண்ணாய்வு தொலைநோக்கியான அரிசிபோவின் மூலம் இந்த சமிக்ஞைகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் […]

கூகுல் நிறுவனத்துக்கு $2.7 பில்லியன் அபராதம்

கூகுல் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தால் அதி கூடிய அபராதத் தொகையான $ 2.7பில்லியன் விதிக்கப்பட்டுள்ளது. தமது தேடுதல் தளத்தில் தமது நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களுக்கு முதன்மை இடம் வழங்கியதாக கூகுல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை 90 நாட்களுக்குள் செலுத்த […]

Facebook/ பாவனையாளர்களை இரகசியமாக கண்காணிக்கவுள்ள பேஸ்புக்

பேஸ்புக் பாவனையாளர்களை வெப்கெம் மற்றும் திறன்பேசி கெமராக்கள் ஊடாக இரகசியமாக கண்காணிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2014ம் ஆண்டு இதற்கான காப்புரிமைக்கு பேஸ்புக் நிறுவனம் விண்ணப்பித்துள்ள போதும், தற்போதே இந்த தகவல் அறியப்பட்டுள்ளது. இதன்படி பேஸ்புக் பாவனையாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் போது, கெமராவின் ஊடாக […]