காணிசுவீகரிப்பு/முற்றுகை போராட்டம்

யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நடத்தப்படவுள்ளது. படையினரின் தேவைக்காக மேலும் பல காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்காக 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை அறிவித்தார். குரல் பதிவு

வடக்கு முதல்வர்/அதிகபாதுகாப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வழமையை விட 30க்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய காவற்துறையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இதற்கான காரணம் விளக்கப்படவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொல்ல முயற்சிக்கப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் […]

க்ரோட்டன் /உண்பது ஆபத்தானது

அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்கோட்டன் செடிகளை உண்ணுவது ஆபத்தானது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன ஜெயசுமன இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார். வயிற்றோட்டத்தைக் குணப்படுத்த க்ரோட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் காணப்படும் ஒருவகையான எண்ணெய் உலர வைத்தப் பின்னரும் விசத்தன்மையுடனேயே இருக்கும். […]

கருணாவுக்கு விருது?

கருணா அம்மானுக்கு அரசாங்கம் வீர விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி அஜித் ப்ரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார். கருணாவை மஹிந்தவும் கோட்டாபயவுமே சரியாக பயன்படுத்தினர். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு கருணா முக்கிய பங்காளி. எனவே சரத் ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் மார்சல் […]

வாள்வீச்சு/கோப்பாயில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் – நவுசிக்குளம் பகுதியில் ஐந்து பேர் கைதாகினர். கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பல வாள்வீச்சு சம்பவங்களுடன் அவர்கள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து உந்துருளி, கோடரி, வௌ;வேறு அளவுடைய வாள்கள் என ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர்கள் 18 முதல் 37 வயதுகளை உடையவர்களாவர்.

சுமந்திரன் /அச்சுறுத்தலுக்கு அவரே காரணம் /மகிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவரே பொறுப்பாளி என்று மகிந்த கூறியுள்ளார். தாம் ஆட்சியில் இருந்த போது முன்னாள் போராளிகள் தொடர்பில் அவதானம் இருந்தது. தற்போது அவர்களை விடுவிக்க சுமந்திரன் உள்ளிட்டவர்கள் முயற்சிக்கின்றனர். எனவே அவருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று மகிந்த […]

அரசாங்கத்துக்கு அறை/டலஸ்

பராக் ஒமாமாவின் காலத்தில் இருந்த சமந்தா பவர், நிஷா பீஸ்வால், தொம் மல்னோவ்ஸ்கி ராஜாங்க அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அவர்களே இலங்கை விடயத்தில் அதிக தலையீடுகளை மேற்கொண்டு வந்தனர். அவர்களுடன் இலங்கை அரசாங்கமும் இணைந்து பணியாற்றியது. அவர்களது பதவி இழப்பு அரசாங்கத்துக்கு விழுந்த அறை என்று மகிந்த ஆதரவு […]

ஜெனீவாமாநாடு / இந்தியாவுக்கு அழுத்தம்

ஜெனீவா மாநாடு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ் தேசிய கட்சி மற்றும் […]

நாணயகடத்தல்/இலங்கையர்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவில் இருந்து 31,000 டொலர்களை இலங்கைக்கு கடத்த முற்பட்டுள்ளனர். தங்களது கைப்பையில் வைக்கப்பட்டிருந்த காற்சட்டையில் அவற்றை மறைத்து வைத்து கடத்த முற்பட்டுள்ளனர். இந்திய, வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7-8 யுத்தக்குற்றவாளிகள்: ஃபொன்சேகா

இலங்கை இராணுவத்தில் ஏழு அல்லது எட்டு யுத்தக்குற்றவாளிகளே இருக்கக்கூடும் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். 200000 பேர் இராணுவத்தில் உள்ளனர். அவர்களில் குறித்த ஏழு எட்டுப் பேரைத் தவிர அநேகமானவர்கள் யுத்தக்குற்றவாளிகள் என்று சொல்வது உண்மையாக இருக்காது. இவ்வாறு யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட தனி நபர்கள் தராதரம் […]

டென்னிஸ்/Roger Federer வென்றார்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ரொஜர் ஃபெடரர்(சுழபநச குநனநசநச) வெற்றி பெற்றுள்ளார். றஃபேல் நடாலுக்கு எதிராக போட்டியிட்டிருந்தார். இதில் 6-4 3-6 6-1 3-6 6-3 என்ற கணக்கில் வென்றார். ஃபெடரர் கைப்பற்றும் 18வது க்ராண்ஸ்லாம் பட்டம் இதுவாகும். டென்னிஸ் ஆடவர் பிரிவில் அதிக க்ராண்ட்ஸ்லாம் வென்றவரும் அவரே.

முல்லைத்தீவு/தமிழக மீனவர்கள் அதிரிப்பு

முல்லைத்தீவு கடலில் தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மாவட்ட மீனவர்களால் அரசாங்க அதிபர் ருபாவதி கேதீஸ்வரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம் இந்த விடயத்தை கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக அரசாங்க அதிபர் கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தினால் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பிரதேச […]

கோட்டாவின் உண்மை முகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மிக் விமான கொள்வனவில் பாரிய பண மோசடி செய்திருக்கிறார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சிறிலங்காவின் தேசப்பற்று மிகுந்தவராக சித்தரிக்கப்படுகிறார். விசாரணை நிறைவில் உண்மை முகம் வெளியாகும். இந்த கருத்துக்களை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறி இருக்கிறார்.

கிரிக்கட்/மேற்கிந்திய தீவுகளுக்கு பயிற்றுவிப்பாளர்

ஸ்டுவார்ட் லோவ் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்த அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த ஃபில் சிமன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பதவி நீக்கப்பட்டிருந்தார். இந்த வெற்றிடத்துக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஸ்டுவார்ட் லோவ், பெப்ரவரி […]

பனிச்சரிவு/மேலும் அய்வரை காணவில்லை

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரில் பனிச்சரிவு அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 இராணுவத்தினர் […]