2017ல் கிரிக்கட்/ சஞ்சீவன்

2017 ஆம் ஆண்டு நிறைவடைந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் அடிப்படையில் அணிகளின் நிலை மற்றும் வீரர்களின் நிலை எவ்வாறு அமைந்துள்ளது என ஐசீசீ அறிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த வருடம் மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகள், 129 ஒருநாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று முதல் இடத்தை இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பகிந்து கொண்டுள்ளன.

இவ்வணிகள் தலா 7 வெற்றிகளை பெற்றுள்ளன.
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் நிலை

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் உள்ளார்.

11 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 3 அரைசதம் அடங்களாக மொத்தம் 1305 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர் அலஸ்டயர் குக் ஆட்டமிழக்காது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற 244 என்ற ஓட்டங்கள் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கமாக டெஸ்ட் போட்டியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் 8 இரட்டை சதங்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் 3 இரட்டை சதங்களை இந்திய அணி தலைவர் விராட் கோலி பெற்றுள்ளார்.

11 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன் உள்ளார்.

அதிக ஆறு ஓட்டங்கள் (சிக்ஸர்கள்) பெற்ற வீரராக நியூசிலாந்தின் கிரான்ட்ஹோம் 15 சிக்கசர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் நிலை

ஒருநாள் போட்டிகளில் இந்தியா அணி அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

அவ்வணி விளையாடிய 29 போட்களில் 7 போட்டிகளில் மாத்திரம் தோல்வியை சந்தித்து 21 போட்டிகளில் வெற்றியை சந்தித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 1460 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவரது சராசரி 76.84 ஆகவும் உள்ளது.

அத்துடன் அதிக தனிநபர் ஓட்டங்களை பெற்ற வீரர்களில் இந்திய அணியின் துடுப்பட்ட வீரர் ரோஹித் சர்மா, இலங்கை அணிக்கு எதிராக பெற்ற 208 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிக சதங்களை பெற்ற வீரர்களாக தலா 6 சதங்களைப் பெற்று விராட் கோலியும், ரோகித் சர்மாவும் முன்னிலையில் உள்ளனர்.

அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி உள்ளார்.

அவர் 18 போட்டிகளில் 45 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதிக ஆறு ஓட்டங்களை (சிக்சர்கள்) பெற்ற வீராக, 46 ஆறு ஓட்டங்களை அடித்து இந்திய அணியின் ரோஹித் சர்மா முன்னிலையில் உள்ளார்.

அணிகளின் நிலை

2017 ஆம் ஆண்டு நிறைவடையும் போது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இந்தியா அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 111 மற்றும் 105 புள்ளிகளுடன் 2ம், 3ம் இடங்களில் உள்ளன.

இலங்கை அணி 94 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டி தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திலும், இந்தியா அணி இரண்டாவது இடத்திலும் அவுஸ்திரேலியா அணி முன்றாம் இடத்திலும் உள்ளன.

20க்கு 20 போட்டி தரவரிசையில், பாகிஸ்தான், நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் முதலாம், 2ம் மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *