‘ஹைக்கு’ கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ என்று அழைக்கப்படும் கவிக்கோ அப்துல் ரகுமான் தமது 80வது வயதில் காலமானார்.

1937 நவம்பர் 9 பிறந்த அவர் ‘பால்வீதி’ என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

கவிதையை நேரடியாகத் அல்லாமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன், ஹைக்கூ மற்றும் கசல் ஆகிய பிறமொழி இலக்கிய வடிவங்களை தமிழ் மொழியில் பிரபல்யப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *