வித்தியா வை கடத்த வாகனம் வழங்கியவருக்கு சிறை

புங்குடுதீவு மாணவி வித்தியா வை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தின் உரிமையாளருக்கு 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட சிற்றூர்ந்திலேயே வித்தியா கடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர் குறித்த வாகனத்தை வழங்கியதன் பின்னர் வெளிநாடு சென்று, அண்மையில் நாடு திரும்பிய வேளையில் கைதாகியுள்ளார்.

அவர் மீது 6 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், இந்த கொலைக்கும் அவருக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்பது நிரூபனமானது.

எனினும் அவரது வாகனம் மற்றும் வாகனத்துக்கான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், 3 மாத சிறை தண்டனையும், 18000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *