அனர்த்தங்களை தெரியப்படுத்த 1902

காலநிலை சார்ந்த அனர்த்தங்களை 1902 என்ற அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்த முடியும்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு.

சாவகச்சேரி – நுணாவில்/ பேருந்து – உந்துருளி விபத்தில் இருவர் பலி

புஞ்சி பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

32448000/= பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயற்சித்த மலேசியா நாட்டவர் இருவர் கைது 

பச்சை வீட்டு இயந்திரசாதனங்களின் இறக்குமதி வரி நீக்கம்

கைப்பேசி கோபுரங்களுக்கு ஒரு அழைப்புக்கு நிமிடத்துக்கு 2 ரூபா வரி

மிருகக்காட்சி சாலைகள் ‘திறந்த மிருககாட்சி சாலைகள் கொள்கையில்’ இயங்கும்.

அனைத்து பிரதேச சபை எல்லைகளிலும் பசுமை பிரதேசம் உருவாக்க ரூ.1500 மில்லியன் ஒதுக்கம்

பொலித்தீன் உற்பத்திக்கு கிலோவிற்கு 10 ரூபா வரி

வாகனங்களுக்கு மின்சாரமேற்றும் நிலையங்கள் அதிகரிக்கப்படும்

மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு அரசாங்கத்தினால் 90 சதவீத சலுகை

2500சீசீயை விட அதிக குதிரை வலுகொண்ட சொகுசு வாகனங்களுக்கு விசேட வரி

எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களின் வரி மறுசீரமைப்பு – மின்சார வாகனங்களின் வரி குறைப்பு

2045ல் நாட்டில் அனைத்து வாகனங்களும் சூழல்பாதிப்பு அல்லாததாக இருக்கும்

2025ல் அரசாங்கம் மின்சார வாகனங்களையே பயன்படுத்தும்.

வங்குரோத்தான சட்டங்கள் தாராளமயமாக்கப்படும்.

10000 வேலை வாய்ப்புகள் – 5000 அமெரிக்க டொலர் மொத்த தேசிய உற்பத்தி

“நீல – பச்சை பாதீடு” என்பது 2018-பாதீட்டின் தொனிப்பொருளாகும்…

மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.5% ல் இருந்து 14.2% ஆக அதிகரிப்பு

நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2018 – பாதீட்டை வாசிக்கிறார்

மகிந்த அணியினர் மிதிவண்டியில் வந்தமை குறித்து விசாரணை – சபாநாயகர்

நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டியில் வந்தார் மகிந்த ராஜபக்ஷ

2018-பாதீடு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளுங்கள்….

கஹவத்தை – கொட்டகெத்தன பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த ரெயில் நிலைய அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

மின்னல் தாக்கியதில் செல்லக்கதிர்காமத்தில் 20 வயதான ஒருவர் பலி

கம்பஹாவிற்கான ஐ.தே.க அமைப்பாளராக ரஞ்சன் ராமநாயக்க நியமனம்

பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துலிப் விஜேசேகர, எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார்

ரெயில் வண்டியில் பொதிகளை கொண்டுசெல்வதற்கான கட்டணம் 50%ஆல் அதிகரிப்பு

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 பேர் வெள்ளவத்தையில் கைது

இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் காவற்துறை வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர்.

திவுலபிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான மேல்மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் மனைவி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

3,370 கிராம் வல்லாப்பட்டையுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொழும்பு – கோட்டை பகுதியில் கைதானார்.

சைட்டம் பிரச்சினைக்கு சில தினங்களில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

திவுலபிட்டிய – ஹென்பிட்டகெதர பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி – 7 பேர் கைது – காவற்துறை

ரயில் சாரதிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடப்பட்டது

அதிக காற்றுடன் கூடிய காலநிலை

நாட்டின் பல பாகங்களிலும் அதிக கடுமையான காற்று வீசும்

காங்கேசந்துறை – திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு மற்றும் ஹம்பந்தொட்டை – பொத்துவல் கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும்.

வளிண்டலவியல் திணைக்களம்

நில்வலா கங்கை பெருக்கெடுப்பு/ அக்குரஸ்ஸ, பானத்துகம பகுதியில் வீதிகளில் வெள்ளநிலை

நாட்டில் நிலவும் சீரற்றக் காலநிலை எதிர்வரும் தினங்களிலும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள சீரற்றத் தன்மையினால் இலங்கையின் பல இடங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும்.

  உள்ளுராட்சி மன்றங்களின் கட்டளைச்சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களில் சபாநாயகர் இன்று கைச்சாத்திடுகிறார். 

குழப்பநிலை/ மருதானை ரெயில் நிலையத்தில் விசேட காவற்துறை பாதுகாப்பு

கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் தாமதம் காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த பீடங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளன

அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீமுக்கு பிணைமுறி ஆணைக்குழு அழைப்பு

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் / கைதாகியுள்ள அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் 16ம் திகதி வரை நீடிப்பு

2018ம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

வட மாகாண சபையின் உறுப்பினர் ரிப்கான் பதியூதீன் (மன்னார் மாவட்டம்) பதவி விலகல்

கொள்ளுபிட்டி க்ரஸ்கட் கட்டிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன், இன்று ஐந்தாவது நாளாகவும் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

கல்கிஸ்ஸையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இடையூறுவிளைவித்தமைக்காக கைதான 6 பேரும், 9ம் திகதி வரை விளக்கமறியலில்

பதுளை- தெமோதரை ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் தீ/ 20 ஏக்கர் வனப்பகுதி தீயில் கறுகியதாக செய்தியாளர் தெரிவிப்பு

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர், ரங்க கலங்சூரிய பதவி விலகினார்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மனு

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த திருத்தச் சட்டத்தில் பிற்பாடு இணைக்கப்பட்ட புதிய சரத்துக்களை நீக்க வேண்டும் என்று அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.

வித்தியா படுகொலைக்குப் பின்னர் ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் கடும் கண்டனம்

நீதிபதி இளஞ்செழியன் தமது 345 பக்க தீர்ப்பு அறிக்கையை வாசிக்கிறார்

வித்தியா வழக்கு – 2,3,5,6 ஆகிய சந்தேகநபர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலை குற்றவாளிகள்: நீதாய மன்று

‪#வித்யா வழக்கு தீர்ப்பின் முக்கியமான பக்கங்களை மட்டும் நீதிபதி வாசிக்கிறார்‬

#வித்யா வழக்கு/ 332 பக்க தீர்ப்பு அறிக்கையை நீதிபதி சசிமகேந்திரன் வாசிக்கிறார்

17 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்/ பருத்தித்துறையில் ஒருவர் கைது

யோசித்த ராஜபக்ஷவிற்கு 28ம் திகதி முதல் 2 வாரங்களுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக இன்றும் பல தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மின்சார பணியாளர்களின் போராட்டம் 7ம் நாளாகவும் தொடர்கிறது.

20ம் திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சபாநாயகரால் இன்று(19) அறிவிக்கப்படவுள்ளது.

20ம் திகதி முதல் 26ம் திகதி நாடு முழுவதும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

20ம் திகதி முதல் 26ம் திகதி நாடு முழுவதும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

கொழும்பின் பல இடங்களில் மழை வெள்ளம் – பாதைகள் மூடல்

குக்குலே கங்கை நீர்த்தேக்க வான்கதவு திறப்பு – தாழ்நில மக்கள் மிகுந்த அவதானம்

எதிர்வரும் 12 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் 100-150மில்லிமீற்றர் அளவில் மழை எதிர்பார்ப்பு

டுபாயில் இருந்து 7.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 2 இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்/ மக்கள் அவதானம்

20ஆம் திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் சப்ரகமுவ மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது(29:8)

இலங்கை மின்சார சபை பணியாளர்கள் சங்கம் இந்த மாதம் 13ம் திகதி அடையாள வேலைநிறுத்தம்

மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில் சிறுநீரக தொகுதி நோய் பரவல் – ஆய்வில் தகவல்

தலவாக்கலை – சென்கிளயார் பகுதியில்  முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து/ மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி 

இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் அடை மழை! வெள்ளம், மண்சரிவு அபாயம்!

மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்

அர்ஜுன் அலோசியஸ் மூன்றாம் நாளாகவும் பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்

மண்சரிவு அச்சுறுத்தலுள்ள மாவட்டங்கள்/ நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை

மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

கடும் மழை – இரத்தினபுரி, அயகம, எஹலியகொட, குருவிட்ட, எலபாத்த பகுதி பாடசாலைகள் வெள்ளி (8) மூடல்

திருகோணமலை – மொரவௌ வான்படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

குக்குலேகங்கை நீர்த்தேக்க வான்கதவு திறப்பு- இங்கிரிய, வலலாவிட்ட, பதுரெலியா, பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி விநியோக மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

வளிமண்டளத்தில் குழப்பம் – தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100mm மழை

மழையுடனான காலநிலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு அநீதி/ நாடு முழுவதும் சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தம்

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கீதாகுமாரசிங்க, தொடர்ந்தும் சிகிச்சைப்பெறுகிறார்

இரத்தினபுரியில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

ரத்துபஸ்வலை தாக்குதல் சம்பவம்: விளக்கமறியலில் இருந்த இராணுவ பிரிகேடியர் உள்ளிட்ட இருவருக்கு பிணை

டெங்கு நோயைத் தடுக்கும் வகையில், மத்திய மாகாண பாடசாலைகளில் பொலித்தீனுக்கு தடை

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாம் ஒருநாள் போட்டியில் 6 விக்கட்டுகளால் வென்ற இந்தியா, தொடரை 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது

கம்பஹாவில் க.பொ.த(உ/த) இரசாயனவியல் வினாத்தாளை வெளியாக்கிய ஆசிரியரின் தந்தையும் சகோதரரும் கைது

மிதிவண்டி உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் கடத்தப்பட்ட ரு.8.5 மில்லியன் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மீரிகமவில் இருவர் கைது

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்காக 20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் இணைக்கப்படவுள்ளனர்/பிரதமர்

பொகவந்தலாவை – குயினா கிழ்பிரிவு/ 2 மாத பெண் குழந்தை அடுப்பில் தவறி விழுந்து படுகாயம்.

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று நடைபெறுகின்றன.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவ செயற்பாட்டாளர் ரயான் ஜெயலத், மாலிகாகந்தை நீதிமன்றில் சரணடைந்தார்

2 கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கடத்த உதவிய அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கைது

கடற்படையின் 21வது தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையாவும்,  பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவும் நியமிக்கப்படவுள்ளனர்

பார்சிலோனா/ ஐ.எஸ். தீவிரவாதிகளின் 2ம் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – ஸ்பெயின் காவற்துறை

பார்சிலோனாவில் மோதல்/ தீவிரவாதிகள் பலர் பலி

மாணவர்கள் போராட்டம்/ கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை, மட்டக்களப்பு வளாகங்கள் மறு அறிவிப்பு வரை மூடல்

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு/ யோசித்த ராஜபக்‌ஷ CID’ல் முன்னிலை

வாக்குமூலம் வழங்குவதற்காக ரோஹித்தராஜபக்ஷ FCIDயிலும், ஷிரந்திராஜபக்ஷ CIDயிலும் முன்னிலையாகியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில்(செப்.12) கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா செல்கிறார்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் காவல்துறை அதிகாரி ஒருவர் சடலமாக மீட்பு

கென்யாவின் ஜனாதிபதித் தேர்தலில் உஹுரு கென்யட்டா மீண்டும் வெற்றி

குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் சம்மாந்துறையில் கைது

வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை

திருகோணமலை – உப்புவெளி – ஆனந்தரபுரத்தில் கிணற்றில் வீழ்ந்த இரண்டு பதின்மவயது(15,16) இளைஞர்கள் பலி

சமுர்தி கொடுப்பனவு ரத்தாகாது, குறையாது: ஜனாதிபதி

அமைச்சர் ரவிகருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பி.ப 1.30க்கு விசேட அறிவிப்பை வெளியிடுவார்/ ராஜித்த

தமிழகம் – மண்டபம் அருகில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கிலோ கடலட்டைகள் பறிமுதல்

ஆட்சிமாற்றத்துக்கு ஏதுவான செயற்பாடுகளை புரியாதீர்/ வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கக்கோவை சபாநாயகரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – இரணைத்தீவு மீனவர்கள் கொழும்பு கோட்டையில் பேரணியை நடத்தியுள்ளனர்

சீனாவின் செச்சுவான் மாகாணத்தில் 6.5 மெக்னிரியுட் நில அதிர்வு/ 13 பேர் பலி, பலரை காணவில்லை

வவனியா/ மூன்றுமுறிப்பு பகுதியில் சிற்றூர்ந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் சிற்றூர்தி சாரதி பலியானதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் மேலாளர், பிணைமோசடி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி வழங்கவுள்ளார்

வகொரியாவுடன் நேரடிபேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக தென்கொரியா அறிவிப்பு

நல்லூர் துப்பாக்கி சூட்டில் பலியான காவல்துறை அலுவலரின் மனைவி மீண்டும் காவற்துறை சேவையில் இணையவுள்ளார்

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 பேர் பலியாகினர்.

சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

இன்று(4) முதல் செப்டம்பர் மாதம் 6 வரை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்காக விடுமுறை

கண்டி எசல பெரஹராவின் இரண்டாவது ரந்தோலி பெரஹரா இன்று(4)

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளரிடம் கையளிப்பு

கண்டி – தலதாமாளிகையின் முதலாவது ரந்தோலி ஊர்வலம் இன்று நடைபெறவுள்ளது

சைட்டத்துக்கு எதிராக கண்டியில் இருந்து நடத்தப்படும் பேரணி நாளை கொழும்பை அடையவுள்ளது

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான பேரணி- கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் வழங்கல் என்பன இன்றுடன் தடைசெய்யப்பட்டுள்ளன.

பதுளை, மகியங்கனை வீதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளர்(75) கொலை…

ரத்துச்செய்யப்பட்ட விமானச்சீட்டுடன் டெல்லி விமான நிலையத்துக்குள் சென்ற இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார்/PTI

அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்

டெங்கு நோயை கட்டுப்படுத்த நாளை முதல் 3 தினங்களுக்கு புதிய தேசிய வேலைத்திட்டம் / சுகாதார அமைச்சு

இன்று முன்னெடுக்கப்படவிருந்த ரயில் இயந்திர சாரதிகளின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

பாடசாலைகளின் 2ம் தவணை விடுமுறை வரும் வெள்ளி முதல் செப்டம்பர் 6 வரை

திருத்தப்பணிகள் காரணமாக வவுனியா – மன்னார் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணையவசதியுடன் மடிகணினிகள் வழங்கப்படும் – சபாநாயகர்

மழைகாரணமாக, கண்டி நுவரெலியா மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து(28) அரசியல் நிலைமகள் குறித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் காட்டு யானைத் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்

பிணை மோசடி/ அர்ஜுன் அலோசியசின் AppleID கடவுச்சொல்லை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உத்தரவு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அனைத்து இலங்கை துறைமுக பணியாளர் சங்கம் நாளை மேற்கொள்ளவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணச் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருணாகலை – அத்துருவெல பகுதியில் கிணற்றில் விழுந்தவரும், அவரைக் காப்பாற்ற இறங்கியவர்களுமாக 3 பேர் உயிரிழந்தனர்

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை அடுத்து, கனியவள கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை போராட்டத்தை பிற்போட்டுள்ளது.

ஹம்பந்தொட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக அனைத்திலங்கை துறைமுக பணியாளர்கள் சங்கம் 27ம் திகதி போராட்டம் நடத்தவுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்தமாதம் 2ம் திகதி பிணை மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவார்/ சட்டத்தரணி

வித்தியா படுகொலை வழக்கு: கைதான காவற்துறை பிரதி மா அதிபரின் விளக்கமறியல் 8/8 வரை நீடிப்பு

அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடனான பேச்சுவார்த்தையை அடுத்து, 4 மணியுடன் போராட்டத்தை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் முடிவு

தென்மாகாண சபையில் மகிந்த அணி உறுப்பினர் ஒருவர் உண்டியலுடன் பிரவேசித்ததை அடுத்து குழப்பநிலை

நல்லூர் துப்பாக்கிச் சூட்டில் பலியான காவற்துறை அலுவலர் சரத் ஹேமசந்திர, உதவி காவற்துறை பரிசோதகராக (SI) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆயுதங்களுடன் அனுராதபுரம் – மீகெல்லேவை விகாரையில் கொள்ளையிடவந்தவர்கள் மீது காவற்துறை துப்பாக்கிச்சூடு/ ஒருவர் பலி

முல்லைத்தீவு – முகத்துவாரத்தில் கத்திக்குத்து ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

உத்தரவின் அடிப்படையில் அர்ஜுன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்கள் சீஐடியிடம் கையளிப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூட்டு முயற்சி/ 2 பேர் கைது 

புகைத்தலுக்கு அல்லாத புகையிலை உற்பத்திகளுக்கு இன்று முதல் தடைவிதிப்பு

வட மத்திய மாகாண சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் டி.எம்.அமரதுங்க தெரிவு

கொழும்பு தெற்கு மற்றும் தெஹிவளை/கல்கிஸை பகுதிகளில் 20ம் திகதி 8 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரெயில் சேவை சில தினங்களுக்கு மதவாச்சி வரையில் மட்டும்

பதுளை – ஹாலிஎல – குயின்ஸ்டவுன் பகுதியில் உள்ள வனப்பிரதேசம் ஒன்றில் தீ பரவியுள்ளது/ செய்தியாளர்

தனிப்பட்ட காரணங்களால், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜெயசூரிய பதவி விலகல்

பங்களாதேஷூக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உமாஓய நதியில் நீராட சென்ற தாய், மகள், பாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு 

வெள்ளவத்தையில் சீனப்பெண்ணிடம் 1.5 கோடி ருபாய் கொள்ளை/ காவற்துறை அதிகாரி உட்பட 2 பேர் கைது

பரீட்சைகள் தொடர்பான விபரங்களை அறிய 0112784208, 0112784537, 0113188350 மற்றும் 1911 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க

காங்கேசந்துறை சீமெந்துதொழிற்சாலை இரும்பு மோசடி தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1000க்கணக்கான பாலியல் பொம்மைகள் சங்கத்தால் தடுப்பு

தாய்லாந்து வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 2.4 மில்லியன் வெளிநாட்டு நாணயங்கள் மீட்பு

ரத்த பரிசோதனைக்கான கட்டணங்களை தனியார் அதிகரித்துள்ளமை தொடர்பில் விசாரணை/ராஜித்த

பந்துவீச தாமதம் – இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸுக்கு 20% ஏனைய வீரர்களுக்கு 10% அபராதம்

கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களது ஒன்றியம் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று(06) தீர்மானிக்கவுள்ளது

அரச மருத்துவ அதிகாரிகளின் நாளைய போராட்டம் ஒருவாரகாலத்துக்கு ஒர்திவைப்பு

சிறிலங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் அதிகாரக்காலம் 6 மாதங்களுக்கு நீடிப்பு

வத்தளையில் (ஜுன் 26) 7.7 மில்லியன் கொள்ளை/ 5 பேர் கைது

ராஜகிரியவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று(02) அதிகாலை தீப்பரவியது

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பரிந்துரையின் படி வெலிக்கடை சிறைச்சாலை களுத்துறைக்கு மாற்றப்படவுள்ளது.

அஞ்சற்பணியாளர்கள் 3 தினங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

சர்வதேச பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவுடனான புகைப்படம் தொடர்பில், பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் விசாரணை

நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கள சமரவீர/ தற்போது 80%ஆக உள்ள அரசாங்கத்தின் மறைமுக வரி வருமானம், 60%ஆக குறைக்கப்படும்

வரக்காபொலயில் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர், காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கதிர்காமத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 48 யாசகசிறார்கள் மீட்கப்பட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய செயற்குழு இன்று ஒன்று கூடுகிறது.

SAITM/ புதிதாக மாணவர்களை சேர்க்கவும்இ பட்டமளிக்கவும் தடைவிதிப்பு

காலநிலை/ தென்மேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீப்பிட்டியவில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதித்துள்ளது 

நீர்பாசனத்துறை அமைச்சின் புதிய செயலருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்பாசன பொறியியலாளர்கள் போராட்டம்

ஞானசார மீது பழி போடுவதற்காக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதச்சார் வன்முறைகளை ஏற்படுத்துகின்றன/ பொதுபலசேனா

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் தொடரவுள்ளனர்

ரெயில் சேவைப் பணியாளர்கள் இன்று நடத்தவிருந்த போராட்டம் பிரதமர் அலுவலக உறுதிவழங்கலுடன் கைவிடப்பட்டுள்ளது.

பங்களாதேஸை (264-7) 9 விக்கட்டுகளால் வென்ற இந்தியா (265-1) இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது

நானு-ஓய நகரில் பாரவூர்தியில் மோதுண்ட 2ம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

பொரளை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் 3 காவற்துறை அலுவலர்கள் கைதாகியுள்ளனர்

கொலனாவை – நாவலபிட்டிக்கு இடையிலான ரெயில், பொல்காவலை – அலவ்வ பகுதியில் பழுதடைந்திருப்பதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தை வென்ற பாகிஸ்தான் அணி, ஐ.சீ.சீ. சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

கொள்ளுப்பிட்டியில் தாமே(selfy) எடுக்க முயற்சித்த 2 பேர் ரெயிலில் மோதி உயிரிழந்தனர்

மட்டக்குளியில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.

அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க, இன்று முறிவிநியோக முறைக்கேடு குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

மகியங்கனையில் அதிகாலை திரிவுந்து வாவி ஒன்றுள் புரண்டதில் ஒருவர் பலியாகி, மூவர் காயமடைந்ததுடன், 2 குழந்தைகள் காணாது போயுள்ளனர்

கம்பஹாவில் ரெயில் சமிக்ஞைகள் செயலிழந்துள்ளதால், ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன

மின்சார தடைகள் குறித்த முறைபாடுகளை வழங்க 0113030303 என்ற புதிய இலக்கத்தை மின்சார சபை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் TNA நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84 ஆவது வயதில் பிற்பகல் காலமானார்

வெள்ளம்/சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்/DMC

சப்புகஸ்கந்தை – ஹெய்யந்தொடுவவில் மண்சரிவு – 2 பெண்கள் உயிரிழப்பு 

பொலிஸ்/மாத்தறை – தெனியாய – மொரவக்கந்தை பகுதியில் மண்சரிவு

வெள்ளம்: இரத்தினபுரி மாவட்டத்திலும், கேகாலையில் தெஹியோவிட்ட வலையத்திலும் பாடசாலைகள் மூடல்

கடந்த வாரம்(22/23) சடலமாக மீட்கப்பட்ட நுவரெலியா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியரின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

2.7 கோடி ரூபா கணக்கில் வராத பணத்தைக் கொண்டு பொரளையில் வீடொன்றை நிர்மாணித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமவேவிற்கு பிணை.

ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், இராணுவ பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன கைதானார்

மேல், சப்ரகமுவ, தென், மத்தி மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 150 மிமீ மழை

பொரளையில் கொக்கெயினுடன்(15லட்சம் ரூபாய்) ஒருவர் கைதானார்

வாசுதேச நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி

ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் அவரது உடல்நிலை பாரதூரமாக இல்லை என்று வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAITM கல்லூரிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 மாணவர்களும் பிணை

கல்கிரியாகம – பலாகல – நேகம்பஹ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதல்/31 பெண்கள் உட்பட 52 பேர் காயமடைந்தனர்

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்/கைதாகி இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கும் நாளை(19) வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, FCIDஇல் முன்னிலையாகியுள்ளார்

கிளிநொச்சி பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி நான்கு பெண்கள் கைதானதாக கூறப்படுகிறது

கொழும்பில் இன்றும்(17), நாளையும் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

புத்தளத்தில் 1.5 கிலோ(ஒருகோடி) ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஜனாதிபதி/மேதினக் கூட்டத்தில் ஒன்று கூடியவர்களை வைத்து ஆட்சியை மாற்ற நினைப்பது வேடிக்கை

எஸ்.எம். ரஞ்சித் வடமத்திய மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதை(11) அடுத்து அந்த பதவியை குசில் குணரட்ன ஏற்றுள்ளார்.

பொலநறுவை – பெந்திவேவயில் 4 பேர் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேரும் உயிரிழந்தனர்

களுத்துறை- வெலிப்பன்னேயில், துப்பாக்கிச்சூட்டில் இளைஞன்(24) பலி

மகிந்த ராஜபக்ஷவின் சகோதரி காந்தினி விசித்ரா ராஜபக்ஷ(58) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்

சைட்டம் போராட்டம்/இன்றைய (05) இரவு நேர அஞ்சல் ரெயில் அனைத்தும் இரத்து

ஹம்பந்தொட்டை/சூரியவெவ பகுதியில் பெண் ஒருவர் தமது கணவரை தீயிட்டு கொலை செய்துள்ளார்

காணாமல் போனோருக்கு நீதி கோரி அவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு, கிளிநொச்சி வவுனியா போன்ற பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன

இலங்கைக்கு 2Kg ஹெரோயினை கடத்த முற்பட்ட இரண்டு பேர் சென்னையில் கைதாகினர்.

சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான தேசிய கொள்கை, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.