மலையகத்தில் பலவந்த குடும்பக் கட்டுப்பாடு – முரளி ரகுநாதன் அறிக்கை

முரளிரகுநாதன் – தலைவர் புதிய தொழிலாளர் முன்னணி.


பெருந்தோட்ட பகுதிகள் உள்வாங்கப்பட்ட மலையக தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம்,மற்றும்  பதுளை ,இரத்தினபுரி,களுத்துறை போன்ற தோட்டப்பகுதிகளில் வாழும்  தாய்மார்களுக்கு  குடும்ப கட்டுப்பாடு  பரவலாக நாளாந்தம் நடைபெறுகின்றது இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. இவ்வாறான நிலமை  தொடருமானால் பெருந்தோட்ட உறவுகளின் இருப்பின்  அரசியல் அடிமைகளாக  இன்னும் ஒரு சில வருடங்களில் காணமுடியும். 

இதை தடுத்து நிறுத்த சமூக சிந்தனையுடன் அரசில் உள்ள மலையக தலைமைகள்,மற்றும் ஆலயங்கள் ,பெண்கள்  அமைப்புக்கள் முன்வரவேண்டும் என  இன்று   வட்டவளை  ரொசல்ல மக்கள் குடியிருப்பு  திட்டத்தில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து உரையாட்டும்போது  முரளிரகுநாதன் கருத்து தெரிவித்தார் என  பு.தொ.மு ஊடகப்பிரிவு  இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக பு.தொ.மு ஊடக அறிக்கை.,

நுவரெலியா மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட தமிழ் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற  பெருந்தோட்ட உறவுகளின் பிள்ளைகளின் தொகை கடந்த பத்துவருடங்களின் சராசரியின் நிலமை சுமார்  18000 யிரத்தினால் குறைந்து விட்டதாக கற்றல் புள்ளி விபரங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது என  முரளிரகுநாதனால்  மக்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவித்த முரளிரகுநாதன்.,

    பெருந்தோட்டங்களை பொருத்தவரை   அதிகமான பிரதேசங்கள் திட்டமிட்டு காட்டாக்கப்பட்டு  வேறு இனத்தவர்கள் அதன்மூலமாக உள்வாங்கப்பட்டு  அவர்களுக்கான  காலனியாக உருவாக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் பெருந்தோட்ட உறவுகள்  வேறொரு இனத்துடன்  சொல்லனா பிரச்சினைகளுக்கும்,நெருக்குதலுக்கும் முகம்கொடுத்து வாழவேண்டிய  நிலமை இப்போது ஏற்பட்டுள்ளதை மறப்பதற்கில்லை.

அதனால் இவ்வாறான நிலமை எதிர்காலத்தில் எமது பெருந்தோட்ட உறவுகளுக்கு பாரிய விளைவை ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து  விழிப்புணர்வு அதிகமாகவும் பொறுப்பாகவும்  தேவைப்படுவதாகவும்.பெருந்தோட்ட பெண்கள்    குடும்ப கட்டுப்பாட்டை  இல்லாதொழித்து  மழலைச்செல்வங்களை மகிம்மைபடுத்தி., எம்மை ., எமது இனத்தை இஸ்தீரப்படுத்த  முன்வரவேண்டுமென  பு.தொ.மு. தலைவர்    முரளிரகுநாதன்  இந்த பெருந்தோட்ட மலையக உறவுகளின் மக்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது என பு.தொ.மு. ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *