புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மலையக இளைஞன் தற்கொலை?

கஞ்சா கடத்தியதாக தெரிவித்து கைதான மலையகத்தைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் ஒருவர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இளைஞர் ஹப்புத்தளை பகுதியில் உள்ள தோட்டப் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவராவார்.

நேற்று(10) பஸ்த்தியன் மாவத்தையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கைதாகின்றவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து மரணிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *