பிரபாகரன் பிறந்தநாள்/ வவுனியா வளாக மாணவர்களின விளக்க அறிக்கை

மாணவர்கள்,
வவுனியா வளாக மாணவர்கள்
28.11.2017

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

 

கடந்த 26.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி அவர்களது அறையில் மற்றைய மாணவர்களுக்கு தொந்தரவு இல்லாத ரீதியில் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதன் பின்னர் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் அக் கே;கினை உண்டணர். அதன் பின்னர் அங்கு வந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் மீது அடாவடியாக அவர்களின் அறையில் நுழைந்து கடுஞ்சொல் வாரத்தைப்பிரயோகங்களால் பேசியது மட்டுமில்லாமல் சில மாணவர்களை தாக்கி காயத்திற்கு உட்படுத்தினார். இதன் மூலம் முதலாம் ஆண்டு தமிழ் மாணவர்கள் கடும் மன உளைச்சலிற்கு ஆளானார்கள். இதன் பி;ன்னர் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து தமிழ் மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்தில் செய்யமாட்டார்கள் என்ற அடிப்படையில் தாங்கள் இப்பிரச்சினையை இத்தோடு நிறைவு செய்வதாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கூறினார்கள். ஆயினும் இரவு 10 மணியளவில் அவர்கள் தனியாகக் கூட்டடிமான்றை நடாத்தி அதன் பின்பு வளாக முதல்வர் அலுவலகம் சென்று முறையிட்டனர். அவர்களது கோரிக்கையாக முதலாம் ஆண்டு தமிழ் மாணவர்கள் 19 பேருக்கும் வெளியேற்றம் என்பது இருந்தது. வளாக முதல்வர் அதனை மறுத்ததையடுத்து அவர்கள் விடுதிக்கு திரும்பினர்.

பின்பு அடுத்த நாள் காலை பாதிக்கப்பட்ட மாணவர்கள். மாணவர் ஆலோகரிடமும் பீடாதிபதிக்கும், உப விடுதிக்காப்பாளருக்கும் இது சம்பந்தமாக அறிவுறுத்தி தங்களது புகாரை எழுத்து மூலம் கொடுத்தனர். அதனை வளாக முதல்வருக்கும் அனுப்பினர். பின்னர் வளாக முதல்வர் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான மாணவர் ஒன்றியத்துடன் கலந்துரையாடினார். அதன் இறுதி முடிவாக வளாகம் மறு அறிவித்தல் வரும்வரை மூடுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ் மாணவர்கள் விடுதியினை விட்டு வெளியேறினர். பின்பு 02 மணியளவில் சமரசம் செய்வதாக சிரேஸ்ட மாணவர்கள் கூறப்பட்டதை அடுத்து தமிழ் மாணவர்கள் காத்திருந்தனர். பின்னர் அதே வேளை தமிழ் மாணவர்கள் வளாக முதல்வரை சந்தித்து இப்பிரச்சினையை எடுத்துக்கூறி விசாரணையமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னரும் சமரச தீர்வுக்காக ஒன்றியத்துடன் கதைப்பதற்கு காத்திருந்த தமிழ் மாணவர்களை அசைட்டை செய்து ஒன்றிய மாணவர்கள் நகர்ந்தனர் அதனையடுத்து தமிழ் மாணவர்கள் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறினர். இருந்த போதிலும் சிங்கள மாணவர்கள் இன்று காலை தாண்டியும் அங்கேயே தங்கியிருந்து புரளிகளை ஊடகத்திற்கு அறிவித்துக்கொண்டிருக்கின்;;றார்கள். இதே வேளை சில சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் மீது முகப்புத்தகத்தில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை சிங்கள ஊடகங்கள் இப்பிரச்சினையை தவறான ரீதியில் சித்திரித்து வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதில் தலையிட்டு ஓர் நியாயமான முடிவை விசாரணைக்குழு மூலம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா வளாக மாணவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *