பாகுபலியின் மற்றுமொரு சாதனை

உலக அளவில் 1000 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்து ஏற்கனவே பாகுபலி பாகம் 2 சாதனைப் படைத்துள்ளது.

தற்போது மூன்றாம் வாரத்தில் இருக்கும் பாகுபலி திரைப்படத்தின் ஹிந்தி மொழியாக்கம், 500 கோடி இந்திய ரூபாய்களை நெருங்குகிறது.

இன்னும் சில கோடிகளே இதற்கு மீதமுள்ளநிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த சாதனைப் படைக்கப்படும் என்று இந்தியாவின் பாக்ஸ்ஒஃபீஸ் அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஹிந்தியில் வெளியான சர்கார் 3 மற்றும் மேரி பியாரி பிந்து போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்டத் திரைப்படங்களும், பாகுபலி2வின் ஓட்டத்தை பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *