பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களில் வேலை வாய்ப்புகள்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பதவி வெற்றிடங்கள் உள்ளன.

 

உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், உதவிக்கணக்காளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளுக்கும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

போட்டிப் பரீட்சைக்கு  உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை  ஆகும்.
மேலதிக விபரங்களையும், விண்ணப்ப படிவத்தையும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *