நைஜீரிய குண்டுவெடிப்பில் பலர் பலி

கிழக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 50 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் அடமாவா மாநிலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள முபி என்ற நகரின் பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இன்னும் யாரும் உரிமைக் கோரவில்லை என்றாலும், போக்கோ ஹராம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

அதேநேரம், போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடந்த 8 ஆண்டுகளில் அங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

#BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *