நிறைவு பெற்றது ஆஷஸ்

இங்குலாந்துக்கு எதிரான ஆஸஷ் டெஸ்ட் கிரிக்கட் தொடரை அவுஸ்திரேலியா அணி 4க்கு 0 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்கம் இடையில் இடம்பெற்ற 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தபோட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி  7 விக்கட்டுக்களை இழந்து 649 குவிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல் விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களையும் 2வது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், ஏனைய 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்தநிலையில், இங்கிலாந்திடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *