தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சி, ப்ளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் மாவட்ட ரீதியாக உள்ளாட்சி ஆசனப்பங்கீட்டு விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

மாவட்டரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ள ஆசனப்பங்கீட்டு விபரம்

யாழ்ப்பாணம்

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வல்வெட்டித்துறை நகரசபை என்பன ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும், அங்கு 40% வேட்பாளர்களும்.
 யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் ரெலொவிற்கு.

நல்லூர் பிரதேசசபை, வலி கிழக்கு, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபையும் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா இரண்டு வருடம் பங்கிடுவார்கள்.

நல்லூர், கரவெட்டி தெற்கு மேற்கு முதல் இரு வருடம் தமிழரசுக்கட்சிக்கு.

இந்த மூன்று சபைகளில் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா 40%,  20% புளொட்டிற்கு.

யாழ்ப்பாணத்தில் ஒரு சிக்கல் நிலை நீடிக்கிறது.

புளொட் உடுவில்,வட்டுக்கோட்டை தொகுதிகளை கோரியது. எனினும் மானிப்பாய் தொகுதியே தர முடியுமென தமிழரசுக்கட்சி கூறியுள்ளது. இந்த இரண்டு தொகுதியும் கிடைக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கவுள்ளதாக புளொட் கூறியுள்ளது.

 


கிளிநொச்சி

கிளிநொச்சியின் மூன்று சபைகளான கரைச்சி பூநகரி, பச்சிலைப்பள்ளி மூன்று சபைகளின் தவிசாளர்களும் தமிழரசுக்கட்சி.

ரெலோவிற்கு மூன்றின் தவிசாளர்களும்.

இங்கு தமிழரசுக்கட்சிக்கு 60%, மற்றைய இரண்டு பங்காளிகளிற்கும் தலா 20% ஒதுக்கப்பட்டுள்ளது.

 


வவுனியா

நெடுங்கேணி பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு. வவுனியா நகரசபை மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் புளொட்.

வவுனியா தெற்கு பிரதேசசபையை ரெலோ, புளொட் தலா இரண்டு வருடங்கள் பங்கிடும்.

(யார் முதலில் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.)

செட்டிக்குளம் பிரதேசசபை ரெலோவிற்கு.

 

மன்னார்

மன்னாரில் மன்னார் நகரசபை, மாந்தை மேற்கு ரெலோவிற்கு. மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு.

 

மட்டக்களப்பு

 

களுவாஞ்சிக்குடி, போரதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு.

மட்டு நகரசபை பிரதிமேயரும் ரெலோவிற்கு.

செங்கலடி புளொட்டிற்கும் தமிழரசுக்கட்சிக்கும் பங்கிடப்படும்.

ஆரையம்பதி புளொட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேசசபையின் உப தவிசாளர் புளொட்டிற்கும் வழங்கப்படவுள்ளது.

 

அம்பாறை

திருக்கோவில், காரைதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு.

கல்முனை எதிர்கட்சி தலைவர் பதவியும் ரெலோவிற்கு.

அங்கு கிடைக்கும் 8 உறுப்பினர்களில் 5 ரெலோவிற்கும், 3 தமிழரசுக்கட்சிக்கும். நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிக்கு.

 

முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு தமிழரசுக்கட்சி. கரைத்துறைப்பற்று பிரதேசசபை ரெலோ, புளொட் பங்கிடும்.

உப தவிசாளர் தமிழரசுக்கட்சிக்கு. மாந்தை கிழக்கு ரெலோ, துணுக்காய் தமிழரசுக்கட்சிக்கு.

 

திருக்கோணமலை

அங்குள்ள மூன்று சபைகளிலும் தமிழரசுக்கட்சியே தவிசாளர் பதவியையும், உப தவிசாளர் பதவிகளையும் பெறும்.

ஏனைய கட்சிகளுடன் பேசி, உறுப்பினர்களை நியமிக்கலாமென முடிவாகியுள்ளது.

 

நன்றி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்


Related News

எஞ்சிய மீனவர்களும் விடுவிக்கப்படுவர்

இலங்கை குறித்த மலேசிய பிரதமரின் கருத்தை ஏற்க முடியாது/ மலேசிய ஊடகம்

மகிந்த காலத்தில் காணாமல் போன சொத்துக்களை தேட உதவும் அமெரிக்கா

பாரிய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம்

அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்த இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *