தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் விஜய்  

மெர்சல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று திடீரென சந்தித்துள்ளார்.

விஜய் நடிப்பில், அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமை திபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது.

படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இந்தநிலையிலேயே, விஜய், முதல்வர் இல்லத்திற்கு சென்று அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *