ஜெருசலேத்துக்கு மாறும் கோட்டமாலாவின் தூதரகம்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அண்மையில் அமெரிக்கா அங்கீகரித்திருந்தது.

தமது தூதரகத்தையும் அமெரிக்கா ஜெருசலேத்துக்கு மாற்றுவதாக அறிவித்தது.

தற்போது கோட்டமாலாவின் ஜனாதிபதி ஜிம்மிமோரல், அந்த நாட்டின் இஸ்ரேலுக்கான தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் இஸ்ரேலின் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், கோட்டமாலா உள்ளிட்ட 9 நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

ஜனாதிபதியான காற்பந்து வீரர்

அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்த இலங்கை

டொனால்ட் ட்ரம்பின் புதிய எச்சரிக்கை

பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *