சிறைக்கூடத்தில் வாலிபர் மரணம் – சுயாதீன விசாரணைக்குழுவுக்கு வலியுறுத்தல்

புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில் 17 வயதான வாலிபர் ஒருவர் கடந்த 11ம் திகதி உயிரிழந்தார்.

இதுதொடர்பில் சுயாதீன குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

குறித்த சுயாதீனக்குழுவில் கட்டாயமாக குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவதுடன், பொலிசாரின் தலையீடு இருக்கவே கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டில் கைதான ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 17 வயதான வாலிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *