சிறிலங்கா கிரிக்கட்டின் அறிக்கையில் பிழைகள்/ சுட்டிக்காட்டும் சூரியன்FM

இந்தியாவுடன் இடம்பெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் டில்லியில், ஏற்பட்ட புகை கோளாறினால், இலங்கை வீரர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கட் அதிகாரிகள் தமது கவலையை தெரிவிக்கவோ அல்லது இது தொடர்பில் இலங்கையின் கிரிக்கட் நிறுவனத் தலைவர் நடவடிக்கை எதனையுமோ  மேற்கொண்டிருக்கவில்லை.

அத்துடன், தமது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வானூர்தி நிலையத்தில் மீள திருப்பி அனுப்பப்பட்ட வீரர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் மன்னிப்புக்கோர தலைவர் உள்ளிட்ட கிரிக்கட் நிறுவனம் பின்னின்றுள்ளது.

எவ்வாறிருப்பினும், பொறுப்புக்களை மறந்த கிரிக்கட் அதிகாரிகள், அவசரமாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மூன்றாவது போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்த கிரிக்கட் நிறுவனத் தலைவர், குறித்த ஊடக அறிக்கை மூலமாக, தமது அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளே இடம்பெற்றன.

எனினும், தலைவரின் அறிவிப்புக்கு அமைய, இலங்கை மூன்று போட்டிகளில் எவ்வாறு வெற்றிபெற்றது என்பது கேள்வியாகும்.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள சிங்கள மொழிமூலமான ஊடக அறிக்கைக்கு அமைய, டெஸ்ட் தரப்படுத்தலில், 96 புள்ளிகளுடன் இங்கிலாந்தை விடவும் ஒரு புள்ளிகள் பின்னிலையில் உள்ளது.

எனினும், ஆங்கிலமொழிமூலமான ஊடக அறிக்கைக்கு அமைய, இலங்கை நியூஸிலாந்தைவிட ஒரு புள்ளி பின்னிலையில் உள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கைக்கு 94 புள்ளிகள் கிடைத்துள்ளதுடன், இங்கிலாந்தை விட 11 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை பின்னிலையில் உள்ளது.

தலைவரின் அறிக்கைக்கு அமைய, சுரங்க லக்மால் ஹெட்ரிக் விக்கட்டுக்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரங்கன ஹேரத் மற்றும் நுவான் சொய்ஸா ஆகியோரைத் தவிர்ந்த எந்தவொரு இலங்கை வீரரும் டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கட்டுக்களை பெற்றோரின் இன்னும் இடம் பிடிக்கவில்லை.

சுரங்க ஓட்டங்கள் எதனையும் வழங்காமல் 48 பந்துகளை வீசியதாகவும், அவர் டென்ஸ் லிலீ மற்றும் ஸ்ரீமத் ரிச்சர்ட் ஹெட்லி போன்ற பந்துவீச்சாளர்களுடன் தொடர்புபடுத்தி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுரங்க லக்மால், 48 பந்துகளில் ஓட்டம் எதனையும் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டால், அவரின் 8ஆவது ஓவரின் 5 ஆவது பந்துக்கு அஜின்கியா ரஹானே பெற்ற 4 ஓட்டத்தை குறிப்பு புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

கிரிக்கட் தலைவர் இவ்வாறானதொரு அறிவிப்பை ஊடகங்களுக்கு வெளியிடுவதானது, அதிகூடிய வேதனத்தைப்பெறும் ஆறு பேருக்கும் அதிகமானோரைக் கொண்ட ஊடகப் பிரிவொன்று இருக்கின்ற நிலையிலாகும்.

போட்டிகளில் தோல்வியடையும்போது கண்டுகொள்ளமுடியாமல், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும்போது அந்த விளக்கு ஒளியில் வெளிச்சம் பெற முயற்சிக்குமு; இலங்கை கிரிக்கட் அதிகாரிகளின் நோக்கத்தை அறிந்துகொள்ள இதுபோன்ற நிகழ்வு மற்றுமொரு உதாரணத்தை தருகிறது.

 

நன்றி: சூரியன்FM


Related News

ரயில் சாரதிகள் மீண்டும் போராட்டம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

பிணை முறி அறிக்கை குறித்து இன்று தீர்மானம்

பாப் இசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *