கொக்காவில் விபத்து/ நால்வர் பலி

முல்லைத்தீவு – மாங்குளம் – கொக்காவில் ஏ9 வீதியில் நேற்றிரவு விபத்து ஒன்று ஏற்பட்டது.

இதில் 4 பேர் பலியானதுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சிற்றூர்ந்து ஒன்று, பழைய முறிகண்டிக்கு அண்மையில் 18ம் போர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாங்குளம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *