குசல் மெண்டிஸ் குறித்து குதூகலமடையும் அஞ்சலோ மெத்தீவ்ஸ்

பங்களாதேஸ் செல்லும் இலங்கை அணியில் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

22 வயதான குசல் மெண்டிஸின் துடுப்பாட்டம் குறித்து பல முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் அவர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படாதிருந்த போதும், தற்போது அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மிகவும் திறமைசாலியான குசல் மெண்டிஸ், அணிக்கு நல்ல வலுவை சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மெத்தீவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *