காவற்துறை அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம்

ஹம்பாந்தொட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுள் ஒருவர் மீது காவற்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தினார்.

இதற்கு இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதிபா மஹாநாம ஹேவா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கைதாகின்றவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படுதல் மற்றும் துன்புறுத்தப்படாதிருத்தல் என்பன அரசியல் யாப்பில் சொல்லப்பட்டுள்ளன.

இதனை மீறும் வகையில் குறித்த காவற்துறை அதிகாரி நடந்துக் கொண்டமை கண்டிக்கத் தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினரிடம் அறிக்கை ஒன்றை கோரி இருப்பதாக, தேசிய காவற்துறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *