கணவனை கொலை செய்து, காதலனுக்கு முகத்தைப் பொருத்திய பெண்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது காதலனுடன் இணைந்து கணவனைக் கொலை செய்துள்ளார் (நவம்பர் -26 இரவு).

பின்னர் தமது கணவருக்கு திராவகவீச்சு(அசிட்) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது காதலரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனை அறியாத கணவரின் பெற்றோர், அவரது முகமாற்று சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தி இருக்கின்றனர் (500,000 இந்திய ரூபாய்).

எனினும் கொலை செய்யப்பட்ட கணவரின் சகோதரர் வைத்தியசாலைக்குச் சென்றபோது(டிசம்பர் 9), சந்தேகம் கொண்டு காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் அவருக்கு கைவிரல் ரேகை சோதனை நடத்திய போது, உண்மை தெரியவர, குறித்த பெண்ணும், அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

#BBC


Related News

150 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மூவர் தப்பியோட்டம்

தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமது பாதுகாப்பையும் உணர்வுகளையும் இலங்கை மனத்தில் இருத்தும் – இந்தியா எதிர்பார்ப்பு

பேரறிவாளன் சிறை மாற்றம்

இந்திய மீனவர்கள் இருபத்துமூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *