ஏ.ஆர்.ரஹ்மான்/ லண்டன் இசை நிகழ்ச்சி தொடர்பில் குற்றச்சாட்டு

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சி லண்டனில் இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழ் பாடல்களே அதிகம் இசைக்கப்பட்டதாக தெரிவித்து, சமுக வலைத்தளங்களில் பல இசை இரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தி பாடல்கள் மிகவும் குறைவாகவே இசைக்கப்பட்டதாக தெரிவிக்கும் அவர்கள், தங்களுக்கு கட்டணங்களை திருப்பி தருமாறும் கோரியுள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியிலேயே பெயரிடப்பட்டுள்ளமையால், தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஏர்.ஆர்.ரஹ்மான் தரப்பில் இன்னும் பதில் எதுவும் வழங்கப்படவில்லை.


Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *