இந்தியா அறிமுகம் செய்த பெருமைக்குறிய 5 விளையாட்டுகள்

01) கரம்

கரம் விளையாட்டு இந்திய துணைக்கண்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இந்தியா வின் மன்னர்களே இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியதாக கருதப்படுகிறது. கண்ணாடியால் செய்யப்பட்ட கரம் தட்டுகள் இன்றும் பட்டியாலா மன்னர் மாளிகைகளில் இருக்கின்றன.

 

02) கபடி

வெளியறங்கு விளையாட்டான கபடி, பண்டைய தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டாகும். தமிழ் நாட்டிலும் பின்னர் தென்னிந்தியாவிலும் விளையாடப்பட்டு தற்போது உலக அளவில் பிரபல்யம் பெற்றுள்ளது. தமிழ் மன்னார்களால் பண்டைய காலத்தில் இந்த விளையாட்டு தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவச் செய்யப்பட்டது. கை – பிடி என்ற சொல்லமைப்பு பின்னர் கபடி என்று மறுவியதாக நம்பப்படுகிறது.


03) லூடோ

லூடோ என்ற இந்த விளையாட்டு, இந்தியாவில் விளையாடப்பட்ட பச்சிஷி என்ற விளையாட்டில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த விளையாட்டு சம்மந்தமாக அஜந்தா ஓவியத்திலும் காட்சிகள் உள்ளன. இதனை பல மன்னர்கள் விரும்பி விளையாடியமைக்கான சான்றுகள் உள்ளன.

 

5 வசனங்களில் அனைத்து செய்திகளையும் அறியுங்கள்…..


04) பரமபதம்

பரமபதம் விளையாட்டு இந்தியாவின் பண்டைய முக்கிய விளையாட்டுகளில் ஒன்று. தற்போது உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ளது. இது இந்தியாவிலேயே முதலில் விளையாடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.


05) சதுரங்கம்

பண்டைய இந்தியாவின் யுத்த தந்திர விளையாட்டு. ஆறாம் நூற்றாண்டில் குப்த பேரரசு காலத்தில் இந்த விளையாட்டு அறிமுகமானது.


Related News

தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் கைது

இலங்கையின் இராணுவ நகர்வுகளை கண்காணிக்கவுள்ள இந்தியா

மீனவர் – படகுகள் – விடுவிக்க நடவடிக்கை/ பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கையில் பதுங்கியுள்ள செம்மரக் கடத்தலாளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *