ஆரோக்கியம் குறித்து கவலையுறும் ஷெரீனா வில்லியம்ஸ்

குழந்தையைப் பிரசவித்ததன் பின்னர், தமது உடல் ஆரோக்கியம் குறித்து அச்சம் கொண்டதாக, அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷெரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

36 வயதான ஷெரீனா வில்லியம்ஸ், 23 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அவர் குழந்தையை பிரசவித்தப் பின்னர், இதுவரையில் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

இந்த ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்தும் அவர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *