அரசாங்கத்தில் குழப்பம்? – உச்ச நீதிமன்றத்தை நாடிய ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பதவிக் கால அளவு குறித்து விளக்கம்பெற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தவிடயம் கூட்டு அரசாங்கத்தின் பங்காளிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து வேற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன், அரசாங்க பங்காளிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆறு ஆண்டு பதவிக்காலம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தாலும், 5 வருடத்திலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெய்லிமிரர்


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *